Thursday, February 9, 2006

அமானுஷ்ய வாசகி #9

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/8.html

இனி என் நண்பனின் (எழுத்தாளரின்) மனைவி தொடர்கிறார்.

சற்று நேரம் தீவிரமாய் யோசித்த டாக்டர் கண்களைத் திறந்தார்.

"அப்போ, சமீப காலமா உன் புருஷன் உன்கிட்ட சில விஷயங்களை மறைக்கிறார்னு சொல்றே, அப்படித்தானே?"

"ஆமாம், சில விஷயங்கள் அவர் மறைப்பதாகப் பட வில்லை, அவரே மறப்பதாகவும் தோணுது"

"அப்படியா, அப்படி எதைப் பத்தியெல்லாம் அவர் மறக்கறாரு, ஏன்னா வேலை மும்மரத்துல சிலவற்றை மறந்துட வாய்ப்பு இருக்கு, இதெல்லாம் சகஜம்தான்"

"இல்லை அங்கிள், அவர் சில நேரம் ஏதாவது ஊருக்கு போயிட்டு வற்றதே அவருக்கு நினைவு இருக்கறதில்லை, இப்போ கூட சில நாட்களுக்கு முன்னாடி ஒரு ஊருக்கு போய் வந்தார், அவர் எங்க போனார், என்னிக்கு திரும்பி வந்தார்னு கூட அவருக்கு நினைவில் இல்லை."

"அப்படியா.. அப்போ அவரை ஒரு நாள் நான் பார்க்கணுமே, ஊரிலிருந்து என்னிக்கு திரும்பி வர்றார்?, தனியாகவா போயிருக்கார்?"

"இல்லை அங்கிள், அவரோட ஃபிரண்டு ஒருத்தரோட போயிருக்கார், அநேகமா இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவார்னு நினைக்கிறேன்"

"தட்ஸ் குட், நான் இன்னும் ஒரு வாரம் சென்னைலதான் இருப்பேன், மறுபடி வந்து பார்க்கறேன், அவர் வந்ததும் எனக்கு ஒரு கால் பண்ணும்மா, சரி இப்ப நான் கிளம்பறேன்"

"சரி அங்கிள், போய்ட்டு வாங்க, அவருக்கு ஒன்னும் பெரிசா பிரச்னை இருக்காதே"

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காதும்மா, நீ ஒண்னும் பயப்படாதே, நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்?"

டாக்டர் அங்கிளை அனுப்பிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் சோர்வுடன் அமர்ந்தேன். டெலிஃபோன் ஒலித்தது.

"ஹலோ.. நாந்தான் பேசறேன், இன்னிக்கு நைட் பஸ்லயே கிளம்புறோம்.. காலையில் வந்துடுவோம்.."
என் கணவர்தான் பேசினார்.

இதற்குப் பின்

Wednesday, February 8, 2006

அமானுஷ்ய வாசகி #8

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/7.html

மனதில் ஏகப்பட்ட குழப்பங்களைச் சுமந்தவாறு அறைக்குத் திரும்பினேன்.
"என்ன? நல்லா காத்து வாங்கி வந்தியா, சரி எனக்கு என்ன வாங்கி வந்தே.?" என்றான் என் நண்பன்.

"போகும்போது ஒண்ணுமே சொல்லியனுப்பாம என்ன வாங்கி வருவாங்கா உனக்கு?" என்றேன்.

சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. நானே ஆரம்பித்தேன்.

"அப்போ இந்த ஊருக்கு வந்து ஒரு பிரயோஜனமான விஷயமும் கிடைக்கலை. ஊருக்குப் புறப்பட வேண்டியதுதானே.."

"நான்தான் சொன்னேனே, அவசியாமா வந்துதான் ஆகனுமான்னு, சரி இன்னிக்கே டிக்கெட் கிடைக்குதான்னு பார்ப்போம்.."

"ஆமா அந்த பொண்ணு எப்படி இறந்துதாம்?" மெதுவாய் இவனிடம் கேட்டேன்.

"அதான் அவளோட புருஷன் சொன்னாரே, பிரசவம் சிக்கலாய்டுச்சின்னு...."

"இதை இப்போதான் நீ தெரிஞ்சிகிட்டயா.? இதுக்கு முன்னாடியே தெரியுமா?"

"என்ன உளற்ரே நீ? அந்த பொண்ணு செத்ததே இதுக்கு முன்னாடி வந்தப்போதான் தெரியும்"

எனக்கு ஏதோ ஒன்று கொஞ்சமாய் புரிவது போலிருந்தது.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/9.html

அமானுஷ்ய வாசகி #7

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/6.html

சூடான காஃபியை அருந்தியவுடன் தலைவலி விட்டது போலிருந்தது. அப்படியே கடைவீதியை ஒரு சுற்று சுற்றி விட்டு அறைக்குச் செல்வதென தீர்மானித்தேன். இரண்டு மூன்று கடைகள் தள்ளி ஒரு பேன்ஸி ஸ்டோர் கண்ணில் பட்டது. ஷோ கேஸில் வைப்பது போல் ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்தேன்.

"வாங்க சார், கூட அவர் வரலியா?"
என்று வரவேற்றார் கடை முதலாளி.

ஆச்சரியம்மாக இருந்தது.
"எங்களை எப்படி தெரியும்?" என்றேன் வியப்பு மேலிட.

"நேத்துதான எங்க தெருவுல என் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு வந்து போனீங்க? அப்ப நான் வெளியில்தான் என் டூ வீலரை துடைச்சிகிட்டு இருந்தேன்.
உங்க கூட வந்தவரு கூட ஒரு எழுத்தாளர்தானே?"

"அடடே, ஒரு தடவை பார்த்ததுமே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே?"

"அட அதான் சார் நம்ம பிசினசுக்கு உபயோகமா இருக்கு, சரி என்ன சார் நீங்க மட்டும் தனியா?"

"அது சரி, அவர் ரூம்லயே ரெஸ்ட் எடுக்கறாரு, நம்மளால ஒரு பக்கம் கொஞ்ச நேரம் சும்மா உட்கார முடியாது, அதான் அப்படியே கொஞ்சம் வாக்கிங் மாதிரி போகலாமேன்னு கிளம்பிட்டேன்"

"அவரை ரெண்டு மூனு முறை பார்த்திருக்கேன், உங்களை இப்பதான் முதல் முறையா பார்க்கறேன்"

"ரெண்டு மூனு முறை வந்திருக்காரா அவர், நான் ஏதோ இப்பதான் இரண்டாவது முறைன்னு நினைச்சேன், இதுக்கு முன்னாடி எப்போ வந்திருக்காருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

"இதுக்கு முன்னாடின்னா.. ஒரு ஆறு மாசம் இருக்கும் சார், அதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணு இறந்தப்போ அவரை பார்த்ததா ஞாபகம்"

வியப்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தேன். இவரிடம் பேசினால் இன்னும் நிறைய விஷயம் கிடைக்கக் கூடும்..

"பாவம் அந்த பொண்ணு பிரசவத்துலேதான இறந்தது.. சரியா கவனிச்சிக்கிலயோ?"

"பிரசவத்திலயா..? யார் சார் சொன்னது உங்ககிட்ட அப்படி? .."
சற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவாறே குரலை தாழ்த்தினாற்போல் கேட்டார்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/8.html

Tuesday, February 7, 2006

அமானுஷ்ய வாசகி #6

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/01/5.html

தலையணையை முதுகிற்குக் கொடுத்தவாறு சொகுசாக கால் நீட்டி அமர்ந்திருந்த என் நண்பனை எரிச்சலாகப் பார்த்தேன்.

"என்ன இவன், பிரச்னை இவனுக்கா, எனக்கா? என்னவோ எனக்காக வந்தது போல இருக்கே!" என்று நினைத்துக் கொண்டேன்.

"ஏண்டா, தன் மனைவியைத்தவிர தன் வீட்டில வேற யாருக்கும் கதை புக் படிக்கற பழக்கமே இல்லைன்னு சொல்றாரே? பின்ன வேற யாருதான் எழுதியிருப்பான்னு நினைக்கறே?"

"என்னைக் கேட்டா, உன்னை எதுக்கு கூட்டிகிட்டு வந்தேன், அதைக் கண்டு பிடிக்கத்தான்..?

"சரி போஸ்ட் ஆஃபீஸ்ல விசாரிச்சியா?

"விசாரிச்சேனே, அந்த லெட்டர் இந்த ஊர்ல இருந்தே போஸ்ட் செய்யப்படலையாம், சென்னன முத்திரைதான் இருக்குன்னு பார்த்துட்டு சொன்னாங்க"

"ம்.. இதுக்கு பின்னாடி என்னவோ விஷயம் இருக்கு, ஒரு வேளை அந்த பெண் இறக்காமல் வேற யாரோட பாடியையோ பார்த்துட்டு அந்தப் பெண்தான்னு இவங்க நினைச்சிருக்க, அந்தப் பெண் உயிரோட சென்னையில எங்கியோ இருக்கலாம்ல"

"அப்படியே வெச்சிகிட்டாலும் அந்தப் பெண் இறந்தது பிரசவத்துலதான்னு அவளோட கணவர் சொல்றாறே, நீ சொல்ற மாதிரி பார்த்தா ஏதாவது விபத்துல அல்ல இறந்திருக்கணும்"

"இதுவும் சரிதான்..இதையே யோசிச்சிகிட்டிருந்தா எனக்கு தலைதான் வலிக்குது, அப்படியே வெளியே போய் கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வற்றேன்.." என்று எழுந்தேன்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/7.html