இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/6.html
சூடான காஃபியை அருந்தியவுடன் தலைவலி விட்டது போலிருந்தது. அப்படியே கடைவீதியை ஒரு சுற்று சுற்றி விட்டு அறைக்குச் செல்வதென தீர்மானித்தேன். இரண்டு மூன்று கடைகள் தள்ளி ஒரு பேன்ஸி ஸ்டோர் கண்ணில் பட்டது. ஷோ கேஸில் வைப்பது போல் ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்தேன்.
"வாங்க சார், கூட அவர் வரலியா?"
என்று வரவேற்றார் கடை முதலாளி.
ஆச்சரியம்மாக இருந்தது.
"எங்களை எப்படி தெரியும்?" என்றேன் வியப்பு மேலிட.
"நேத்துதான எங்க தெருவுல என் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு வந்து போனீங்க? அப்ப நான் வெளியில்தான் என் டூ வீலரை துடைச்சிகிட்டு இருந்தேன்.
உங்க கூட வந்தவரு கூட ஒரு எழுத்தாளர்தானே?"
"அடடே, ஒரு தடவை பார்த்ததுமே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே?"
"அட அதான் சார் நம்ம பிசினசுக்கு உபயோகமா இருக்கு, சரி என்ன சார் நீங்க மட்டும் தனியா?"
"அது சரி, அவர் ரூம்லயே ரெஸ்ட் எடுக்கறாரு, நம்மளால ஒரு பக்கம் கொஞ்ச நேரம் சும்மா உட்கார முடியாது, அதான் அப்படியே கொஞ்சம் வாக்கிங் மாதிரி போகலாமேன்னு கிளம்பிட்டேன்"
"அவரை ரெண்டு மூனு முறை பார்த்திருக்கேன், உங்களை இப்பதான் முதல் முறையா பார்க்கறேன்"
"ரெண்டு மூனு முறை வந்திருக்காரா அவர், நான் ஏதோ இப்பதான் இரண்டாவது முறைன்னு நினைச்சேன், இதுக்கு முன்னாடி எப்போ வந்திருக்காருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"
"இதுக்கு முன்னாடின்னா.. ஒரு ஆறு மாசம் இருக்கும் சார், அதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணு இறந்தப்போ அவரை பார்த்ததா ஞாபகம்"
வியப்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தேன். இவரிடம் பேசினால் இன்னும் நிறைய விஷயம் கிடைக்கக் கூடும்..
"பாவம் அந்த பொண்ணு பிரசவத்துலேதான இறந்தது.. சரியா கவனிச்சிக்கிலயோ?"
"பிரசவத்திலயா..? யார் சார் சொன்னது உங்ககிட்ட அப்படி? .."
சற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவாறே குரலை தாழ்த்தினாற்போல் கேட்டார்.
இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/8.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment