Tuesday, March 14, 2006

68 : அமானுஷ்ய வாசகி #10

இதற்கு முன்

(வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கதாபாத்திரங்களுக்கு பெயர்சூட்டு விழா நடத்தப்பட்டது)

மாலை 6 மணி. உளவியல் மருத்துவர் Dr. தேவேந்திரனின் கிளினிக். நரைத்த தனது குறுந்தாடியைத் தடவியவாறே உற்றுப் பார்க்கிறார். மல்லாக்கச் சாய்ந்திருக்கும் நாற்காலியில் வசதியாக அமரவைக்கப் பட்டிருக்கும் எழுத்தாளர் வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்.

சன்னமான மஞ்சள் வெளிச்சம்.

"ரிலாக்ஸா இருங்க, இப்போ நான் கொஞ்சம் கேள்விகள் கேட்கப்போறேன், நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும்..."

"சரி" என்று முனகலாக பதில் வருகிறது.

"ம்...இப்போ ஆரம்பிக்கறேன்.. உங்க பேரு என்ன?"

".........சிவப்பிரகாஷ்"

"உங்க சொந்த ஊர் எது?'

"...சென்னை"

"நீங்க என்ன தொழில் செய்யறீங்க?"

"எழுத்தாளரா இருக்கிறேன்..."

"சரி.. உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?"

"ஆகிவிட்டது"

"உங்க மனைவி பேரு என்ன?"

"என் மனைவி பேரு தாரா"

"குழந்தைகள் இருக்கா?"

"ம். இருக்கு. ஒரு பையன்."

"பேரு? என்ன வயசு"

"அஷோக், வயது ரெண்டு"

மேலும் கேள்விகள் தொடர்ந்தன.

நீளமான காரிடாரில் கவலையுடன் நின்றிருந்த சிவப்பிரககஷின் மனைவி தாரா அவனது நண்பனை ஏறிட்டாள்.

"சக்தி.. உங்க பிரண்டுக்கு ஒன்னும் ஆகாதே?"

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாய்டும்.. ஒண்ணும் கவலை படாதீங்க தாரா"

என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த அறையை விட்டு வெளியே வந்தார் Dr.தேவேந்திரன்.


அந்த குளு குளு அறையில் தேவேந்திரனுக்கு எதிரில் மூவரும் அமர்ந்திருந்தனர்.

"தாரா, நீ பயப்படுற மாதிரி உன் ஹஸ்பெண்டுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, ஹெ இச் ஆல்ரைட், பட்..."

"என்ன சொல்றீங்க டாக்டர்?" என்றான் சக்தி.

"மிஸ்டர் சக்தி, சில நாட்களா ஓரிரு விஷயங்கள் மட்டும் சிவாவோட மனசுல இருந்து அழிந்து விடுகிறது. அதாவது மறந்து போய்டுறாரு. ஆனா ஆழ்மனசுல அந்த நிகழ்ச்சிகளோட பதிவு இருந்துகிட்டுதான் இருக்கு. இது எல்லா விஷயத்துலயும் நடக்கறதில்லை. பயப்படவும் தேவை இல்லை. "

"தவிர இதுக்குக் காரணம் ஓயாத உழைப்பு, மெண்டல் ஸ்டிரெஸ் போன்றவை காராணங்களா இருக்கக் கூடும் கொஞ்ச நாள் எங்கியாவது வெலியூர் போய் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்"

"தாரா.. நீ கொஞ்சம் அவரை பார்த்துக்கோ எப்பப் பாரு பேப்பரும் கையுமாவே இருப்பார்னு நினைக்கறேன், பட் யூ டோண்ட் வர்றீ! இப்போ நீங்க கிளம்பலாம், எதுக்கும் ஒன் மோர் செக் அப் தேவைப்படும்னு நினைக்கறேன்"

"அப்போ வருகிறோம் அங்கிள்"

மூவரும் தத்தமது இருக்கைகளினின்று எழுந்தனர்.

இதற்குப் பின்

No comments:

Post a Comment