Wednesday, March 15, 2006

69 : அமானுஷ்ய வாசகி #11

இது வரை

கோயம்பேடு பேருந்து நிலையம். சக்தி அந்த முன் பதிவு மையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். முன்பதிவுக் கவுண்டரில் இருந்த ஆள் நிமிர்ந்து பார்த்தார்.

"எக்ஸ்கியூஸ்மி, இங்க மிஸ்டர் ராஜமாணிக்கம்.."

"ஓ ராஜமாணிக்கமா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், இப்ப வந்துடுவார்.. அதோ வந்துட்டார் பாருங்க.." என்று கை காட்டினார்.

உள்ளே நுழைந்தவாறே "யார் என்னைப் பார்க்கவா வெயிட் பண்றீங்க? அட நீங்களா? அந்த ரிசர்வேஸன் ஸ்லிப் எடுத்து வெக்கச் சொன்னீங்களே!"

"ஆமாம் சார், எடுத்து வெச்சீங்களா?'

"அதை அடுத்த நாளே எடுத்து வெச்சிட்டேன், ரெண்டே நாள்ள வரதா சொல்லிட்டு போனீங்க, ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சி, சரி இருங்க எடுத்துகிட்டு வரேன்" என்றவாரு உள்ளே நுழைந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு

"இந்தாங்க சார் அவர் கொடுத்த ரிசர்வேஷன் ஸ்லிப்போட காப்பி"

"ரொம்ப தாங்க்ஸ் சார்" என்றவாரே இப்போது ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர் கையில் திணித்தான் சக்தி.

அவனுக்கு வியப்பாக இருந்தது. ரிசர்வேஷன் ஸ்லிப்பில் அவன் பெயரும் , சிவா பெயரும் சரியாகவே இருந்தது. இவரும் ரிசர்வேஷன் செய்ய வந்தது சிவாதான் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் இதில் இருக்கும் எழுத்துக்கள் மட்டும் சிவாவின் எழுத்துக்களுடன் ஒத்துப் போகவில்லை.

ஏதோ ஒரு ம்உடிவுக்கு வந்தவனாய் தன் செல்பேசியை எடுத்தான்.

"ஹெல்லோ டாக்டர் தேவேந்திரன்"

"யெஸ் ஸ்பீக்கிங்க்"

"நாந்தான் சக்தி பேசுகிறேன், சிவாவுடைய நண்பன்"

"சொல்லுங்க மிஸ்டர் சக்தி, நானே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னு இருந்தேன், நீங்களே கால் பண்ணிட்டீங்க"

"நானும் உங்களை சந்திக்கணும்னு நினைச்சேன் டாக்டர், இன்னிக்கு ஈவ்னிங்க் ஒரு 4 மணிக்கு முடியுமா முடியுமா டாக்டர்?"

"4 மணியா... ஓ.கே. நீங்க கிளினிக்குக்கு வரவேண்டாம், நேரே நான் தங்கி இருக்கற கெஸ்ட் ஹவுஸ் அடடயாறுல இருக்கு, அங்க வந்துருங்க மிஸ்டர் சக்தி"

"ஓ கே டாக்டர், ரொம்ப தேங்க்ஸ் நான் ஷார்ப்பா 4 மணிக்கு அங்க இருப்பேன்"


மாலை 4 மணிக்கு முன்னதாகவே சக்தி அவரின் இருப்பிடத்தை அடைந்தான்.

"காஃபியை எடுத்துக்குங்க சக்தி, இப்போ நான் சொல்லப் போர விஷயம் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கலாம், அல்லது அதிர்ச்சியாகவும் இருக்கலாம், நான் சொல்றதை பொறுமையா கேளுங்க, ஏதாவது சந்தேகம்னா கடைசியா நீங்க கேட்கலாம்"

"சொல்லுங்க டாக்டர்.."

"உங்க ஃபிரண்ட் சிவா, அதான் எழுத்தாளர் சிவப்பிரகாஷ் கடந்த சில நாட்களா, சில நேரங்களில் அவருடைய கட்டுப் பாட்டில் இருப்பதில்லை."

"டாக்டர் யூ மீன்..?"

"முழுசாக் கேளுங்க மிஸ்டர் சக்தி! அந்த சில நேரங்களில் அவருடைய நடவடிக்கைகள்தான் அவருக்கு சுத்தமா நினைவில் இருப்பதில்லை. அந்த நேரங்களில் அவருடைய மனசு அல்லது உள்மனசு அல்லாத ஏதோ ஒண்ணு அவரை இயக்குது"

"டாக்டர்.. தட் மீன்ஸ்..சிவாவுக்கு.....!?"

"யெஸ் யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் சக்தி...."

இதற்குப் பின்

No comments:

Post a Comment