இது வரை
மிக நீண்ட மொனத்திற்குப் பிறகு சக்தி தொடர்ந்தான்.
"சோ, அந்த வசந்தியோட ஆவிதான் சிவாவை ஆட்கொண்டிருக்குன்னு சொல்றீங்களா டாக்டர்?"
"யெஸ்! யூ ஆர் அப்சல்யூட்டலி ரைட்"
"ஆனா அந்த ஆவியால இதுவரை எந்த தொந்தரவும் இல்லையே டாக்டர்?"
"கரெக்ட் அந்த ஆவியின் நோக்கமே மற்றவங்களுக்கு தொந்தரவு கொடுப்பதல்ல, தான் இறந்தது பிரசவத்துல அல்ல, தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளால் தானே மேற்கொண்ட தற்கொலைன்னு தெரியப் படுத்தனும்"
"இருக்கட்டும் ஆனா அதுக்கு சிவாவை ஏன் டாக்டர் தேர்ந்தெடுக்கனும்?"
"நல்ல கேள்வி, யாரிடமும் மனம் விட்டு சொல்ல முடியாத விஷயங்களைக் கூட ஒரு வாசகியா நிறைய கடிதங்கள் மூலம் அந்தப் பொண்ணு இவருக்கு எழுதியிருக்கா. இவரு எல்லா கடித்துக்கும் பதில் எழுதலைன்னாலும் அந்தப் பொண்ணு வசந்திக்கு தன் மனக் குமுறல்களுக்கு ஓர் வடிகாலா இருந்தது சிவாதான். மேலும் தன்னோட கதைகளில் இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் படியா எழுதறதுனால நிஜத்திலும் தனக்கொரு நல்ல முடிவை சிவாவால் தான் தர முடியும்னு வசந்தி ஆழமா நம்பியிருக்கா. அதனோட விளைவுகள்தான் சிவாவை ஆட்கொள்ள நினைச்சது!"
"இப்போ சிவாவை எப்படி குணப்படுத்தரது டாக்டர்?"
"சிம்பிள், அந்தப் பொண்ணு கொடுமைகள் செய்யப்பட்டிருக்கான்னு சொல்றதுக்கு உண்டான ஆதாரங்கள் இல்லைன்னுதான் காவல் துறை இது தற்கொலை இல்லைன்னு முடிவுக்கு வந்திருக்காங்க! சிவாகிட்டே இருக்கும் கடிதங்கள்தான் அதுக்கு ஆதாரமே. அவைகளை வெச்சி வசந்தி கணவன் மேல நடவடிக்கை எடுத்தா போதும். அந்தப் பொண்ணு சிவாவை விட்டுடும்"
"நான் சிவாகிட்டா பேசினப்போ கூட அந்த மாதிரி கடிதங்கள் பத்தி எதுவும் என்கிட்ட சொல்லலியே டாக்டர்"
"உங்கிட்ட பேசும்போது சாதாரண எழுத்தாளனா உங்க ஃபிரண்டு சிவாவா பேசியிருக்கலாம், அதனால ஒரு வாசகியோட பெர்சனல் லெட்டெர்ஸை உங்ககிட்ட இருந்து மறைச்சிருக்கலாம்,
மறுபடி பேசிப் பார்த்தால் எங்கே வெச்சிருக்கார்னு தெரியவரலாம்"
"ஓ.கே டாக்டர், சரி நான் கிளம்பரேன்." என்று எழுந்தான் சக்தி.
இதற்குப் பின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment