Friday, February 27, 2009

நாலாம்பிறை - திதி 1


நந்தா என்கிற நந்தகோபால் விமான நிலையத்தை நெருங்குவதற்குள் மணி இரவு 11 ஆகிவிட்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு விரைந்து உள்ளே சென்றான். சரியாக 11.20 க்கு விமானம் வந்திறங்கிவிடும். நியூயார்க்கிலிருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை முத்தமிட்டபோது நந்தா வரவேற்புப் பகுதியை அடைந்திருந்தான்.

வெகுநேரம் காக்க வைக்காமல் உற்சாகமான புன்னகையுடன் வெளிவாசலை நோக்கி நடந்தார் புரஃபசர் ஷர்மா! ஐம்பதைத் தொடும் வயதை அறிவிக்கும் வண்ணம் அவரது முன்னந்தலையில் காணாமல் போயிருந்த கேசமும், பின்னந்தலையின் நரையும் பளிச்சென வெளிப்பட்டிருந்தன. இருப்பினும் வயதை ஒவ்வாத சுறுசுறுப்பு அவரது நடையில் தெரிந்தது! அவருடன் உதவியாளினி ஆனந்தியும் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். இருபத்தைந்தைக் தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நம்ப மறுத்தாலும் இருபத்தெட்டைக் கடந்து இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன என்பதே உண்மை!

வரவேற்புப் பகுதியை அடைந்தவுடன் தேடுவதற்கு வாய்ப்பளிக்காமல் "மிஸ்டர் ஷர்மா" என்று குரல் கொடுத்தான் நந்தா. பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியேற லேப்டாப் மற்றும் இதர பெட்டிகளை டிராலியில் வைத்து உருட்டிக் கொண்டு பின் தொடர்ந்தாள் ஆனந்தி!

அவர்கள் மூவரையும் நிரப்பிக் கொண்டு நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நோக்கி புறப்பட்டது கார்!

சாலையில் கவனத்தை வைத்து ஓட்டிக் கொண்டே வினவினான் நந்தா!
"பயணம் எப்படி இருந்தது மிஸ்டர் ஷர்மா? ஒன்றும் சிரமங்கள் ஏற்படவில்லையே?"

"வெரி நைஸ் யங்க் மேன்! இனிமையான பயணம்! இன்னும் சொல்லப் போனால் அந்த பெனிசுல்வேனியப் பல்கலைக் கழகத்தில் கழித்த 4 நாட்களுமே மிக அருமையாகக் கழிந்தன! நல்ல பல மனிதர்கள், ஆர்வம் மிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுடனான கலந்துரையாடல், விருந்து என்று ஒரே அமர்க்களமாக இருந்தது!"

இரவு நேரக் நெரிசலற்ற சாலையில் முப்பது நிமிடங்களில் ஹோட்டல் வளாகத்தில் கார் நுழைந்தது!

"ஓகே மிஸ்ட ஷர்மா! நன்கு ஓய்வெடுங்கள்! மீண்டும் நாளை மதியம் வந்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன்! குட் நைட்!"
"மிஸ் ஆனந்தி! நீங்களும் நன்கு ஓய்வெடுங்கள்! குட் நைட்" என்று விடைபெற்றான் நந்தா!

கார்பார்க்கிங்கை நெருங்கி நேரம் பார்க்கையில் மணி 2 ஆகிவிட்டிருந்தது!
கார் டாஷ் போர்டைத் திறந்து பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்தான்! பார்க்கிங் காவளாளியின் சம்பிரதாய சலாம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காரை வெளியே எடுத்தான்.

காரின் ஸ்டீரியோவை ஆன் செய்து தனக்கு பிடித்த மெலோடீச் கலெக்ஷனை ஓடவிட்டான்! ரம்யான அந்த மெலோடி பாடல்களுக்கு நடுவே சிறிது நேரமே சந்தித்த ஆனந்தி அவன் நினைவில் வந்து வந்து சென்றாள்.

ஸ்டீரியோவின் மெலோடியஸில் குழைந்த சன்னமான எஸ்.பி.பியின் குரலையும் தாண்டி அவன் காதுகளில் கணீரென்ற குரலில்

"சூடப்பா சந்திரனார் மூன்றேழ் ஐந்து
சுத்த இந்து பதினொன்றில் தனித்திருக்க
மாடப்பா மந்திரங்கள் செய்வான் காளை
மகத்தான வாதமொடு வைத்தியம் செய்வான்"

என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும் வண்ணம் மெதுவாக நிதானமாக அழுத்தம் திருத்தமாக ஏதோ ஒரு செய்யுளை சொல்லிக் கொடுப்பது போல் அவனது செவிகளில் கேட்டது!

தொடரும்..................!

20 comments:

  1. சிபி! நல்ல தொடக்கம் விறு விறுப்பா இருக்குமின்னு நினைக்கத் தோணுது. திடீர்னு ஒரு செய்யுள் கடைசியா வந்துச்சா அதான் புரியல என்ன பொருள்னு.

    மற்றபடி தொடர்ந்து போடுங்க, படிக்க நாங்க ரெடி.

    விடாம அந்த ஓலையில போடுற செய்யுளும் போடுங்க... சிவவாக்கியார் மாதிரி - நன்றி!

    ReplyDelete
  2. நன்றி தெக்ஸ்!

    ஓலைல போடுற செய்யுள் - இமேஜ் என் மாப்பி ரங்காவின் கைவண்ணம்!

    ReplyDelete
  3. கடைசிய வர செய்யுளுக்கு

    "ஒரு ஜாதகத்தில் 3 7 5 11 ல் சந்திரன் தனித்து நின்றால் மந்திர மாயங்கள் செய்வான் வைத்தியக் கலை கற்பான்" இதான் அர்த்தம் தெக்ஸ்!

    புலிப்பாணியார் பாடல்களில் சந்திரனைப் பற்றிய ஒரு பாடலில் வரும் வரிகள் இவை!

    ReplyDelete
  4. aaaaaaaah....thalai thangalidam tamil padam karka aaval...

    ReplyDelete
  5. நல்ல விருவிருப்பான தொடக்கம்.. க்ரைம் மா இருந்தா தொடர்ந்து படிக்கனும்னு ஆசையா இருக்கு...
    எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன்'னின் கதையின் சாயல் இருப்பதை போன்று உணர்கிறேன்.. :) அவருடைய கதைகளில் இப்படி நிறைய "செய்யுள்" எல்லாம் வரும்.. :) வாழ்த்துக்கள்... தொடரை படிக்க ஆவலுடன்...

    ReplyDelete
  6. ஒரு ஜாதகத்தில் 7 (கலஸ்திர ஸ்தானத்தில்) சூரியன், புதன், குரு, சனி.. இவங்க நாலு பேரும் இருந்தால், யார் அந்த பெண்ணிற்கு கணவனாக வாய்ப்பு இருக்கு?!

    ReplyDelete
  7. கவிதா உங்க கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு ஜோதிட ஞானம் கிடையாது!

    என் வாத்தியார்கிட்டே கேட்டு சொல்றேனே!

    ReplyDelete
  8. யாருடைய பார்வை அதிகமாக இருக்கு.. இல்ல, யாருடைய பலம் அதிகமாக இருக்குன்னு பார்த்து அவங்க ன்னு சொல்லிட முடியும் இல்லையா?! அல்லது ஜாதகம் இருந்தால் தான் முடியும்னு சொல்லுவீங்களா?

    ReplyDelete
  9. ம்ம்..சரி.. எனக்கு தெரிந்து ஜோதிடத்தில் நன்றாக செய்வார்கள் என்பது கூட ஜாதகத்தை நம் கிரகங்களின் ஆதிக்கத்தை வைத்து சொல்லிவிட முடியும் என்று கற்று்க்கொண்டது. ஆனால் இன்று ஜோதிடம் சாப்ட்பேர் வந்த பிறகு எல்லோருமே பிறந்த நேரத்தையும், தேதியையும் கொடுத்தால் ஒருவரின் ஜாதகத்தை கணித்துவிட முடியும் அல்லவா?

    :) என்னவோ ஜோதிடம் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.. :) நம்பிக்கை அவரவரை பொறுத்தது..

    ReplyDelete
  10. :)) Aarambam asathala irukku :D

    Kadaisi cheyyul paathu enganna cheyyul ellam ezhuthara alavukku periyaalnu sandhoshapatta adhu sutta pazhamnu sollipputeengalaenna ;)

    ReplyDelete
  11. மிகவும் சீரான ஓட்டத்தில் துவங்குகிறது பயணம் ...

    ReplyDelete
  12. ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருப்பது நல்லதல்ல. 4 கிரகங்கள் என்றால் குழப்பம்தான். கிரகயுத்தம். அதில் யார் யார் அஸ்தமணமகின்றார்களோ?
    ஏழாம் வீட்டிற்கு அதிபதி, ஏழாம் வீட்டில் உள்ள பரல்கள்,
    ஏழாம் வீட்டு அதிபதி சுயவர்கத்தில் உள்ள பரல்கள். என்று அனைத்தையும் அலசித்தான் வரப்போகும் மணாளனைத் தீர்மானிக்க முடியும்

    சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்தை விட ஏழில் அதிகப் பரல்கள் இருந்தால் தகுதி உடைய கணவன் கிடைப்பான். குறைந்திருந்தால் எதிர்பார்க்கும் அளவிற்கு அல்லது ஆசைப்படும் அளவிற்கு உரிய கணவன் அமைவது கஷ்டம்!

    விளக்கம் போதுமா?

    ReplyDelete
  13. சபி, சல்லுன்னு தொடங்குது. சூப்பர். உங்க வால்தனம், கிறுக்குதனம் இதை எல்லாம் மூட்டை
    கட்டிவிட்டு, ஒழுங்குமரியாதையாய் தொடருங்கள்.
    ஆனால் பதிவின் அளவு ரொம்ப சின்னதாய் இருக்கு

    ReplyDelete
  14. கத சூப்பர் - நல்லாவே இருக்கு - சஸ்பென்ச உடனே உடைக்கணும் - எப்ப அடுத்த பதிவு - சிபி

    ReplyDelete
  15. கதை சூப்பரா போகுது தள...

    அடுத்த பாகம் எப்ப?

    ReplyDelete
  16. சிபி..ம்..ம்...ம்...ம்...
    அற்புத தொடக்கம்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  17. மர்மதேசம் ஸ்டைலில் செய்யுளுடன் ஒரு கதை.

    பாராட்டுக்கள். அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete