Thursday, February 9, 2006

அமானுஷ்ய வாசகி #9

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/8.html

இனி என் நண்பனின் (எழுத்தாளரின்) மனைவி தொடர்கிறார்.

சற்று நேரம் தீவிரமாய் யோசித்த டாக்டர் கண்களைத் திறந்தார்.

"அப்போ, சமீப காலமா உன் புருஷன் உன்கிட்ட சில விஷயங்களை மறைக்கிறார்னு சொல்றே, அப்படித்தானே?"

"ஆமாம், சில விஷயங்கள் அவர் மறைப்பதாகப் பட வில்லை, அவரே மறப்பதாகவும் தோணுது"

"அப்படியா, அப்படி எதைப் பத்தியெல்லாம் அவர் மறக்கறாரு, ஏன்னா வேலை மும்மரத்துல சிலவற்றை மறந்துட வாய்ப்பு இருக்கு, இதெல்லாம் சகஜம்தான்"

"இல்லை அங்கிள், அவர் சில நேரம் ஏதாவது ஊருக்கு போயிட்டு வற்றதே அவருக்கு நினைவு இருக்கறதில்லை, இப்போ கூட சில நாட்களுக்கு முன்னாடி ஒரு ஊருக்கு போய் வந்தார், அவர் எங்க போனார், என்னிக்கு திரும்பி வந்தார்னு கூட அவருக்கு நினைவில் இல்லை."

"அப்படியா.. அப்போ அவரை ஒரு நாள் நான் பார்க்கணுமே, ஊரிலிருந்து என்னிக்கு திரும்பி வர்றார்?, தனியாகவா போயிருக்கார்?"

"இல்லை அங்கிள், அவரோட ஃபிரண்டு ஒருத்தரோட போயிருக்கார், அநேகமா இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவார்னு நினைக்கிறேன்"

"தட்ஸ் குட், நான் இன்னும் ஒரு வாரம் சென்னைலதான் இருப்பேன், மறுபடி வந்து பார்க்கறேன், அவர் வந்ததும் எனக்கு ஒரு கால் பண்ணும்மா, சரி இப்ப நான் கிளம்பறேன்"

"சரி அங்கிள், போய்ட்டு வாங்க, அவருக்கு ஒன்னும் பெரிசா பிரச்னை இருக்காதே"

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காதும்மா, நீ ஒண்னும் பயப்படாதே, நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்?"

டாக்டர் அங்கிளை அனுப்பிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் சோர்வுடன் அமர்ந்தேன். டெலிஃபோன் ஒலித்தது.

"ஹலோ.. நாந்தான் பேசறேன், இன்னிக்கு நைட் பஸ்லயே கிளம்புறோம்.. காலையில் வந்துடுவோம்.."
என் கணவர்தான் பேசினார்.

இதற்குப் பின்

No comments:

Post a Comment