Thursday, March 5, 2009

நாலாம்பிறை - திதி 3


பகுதி 2


தனது லேப்டாப் திரையின்மேல் கண்களை மேயவிட்டுக் கொண்டே பேசினார் ஷர்மா!

"என்ன யங்மேன்! இரவு நேரத்துல தனியா போகும்போது ஏதாச்சும் பயந்துட்டியா! ஜஸ்ட் இதெல்லாம் ஒரு பிரம்மை!"

"இல்லைங்க மிஸ்டர் ஷர்மா! ஜஸ்ட் குரல் கேட்டுது, தெளிவில்லாத வாய்ஸ் கேட்டதுன்னெல்லாம் இருந்தா பிரம்மைன்னு எடுத்துக்கலாம்! தெளிவா ஒரு செய்யுளையே சொன்னப்போ இதிலே ஏதோ ஒரு விஷயம் இருக்கணும்னுதான் நினைக்கத் தோணுது!"

"அட! அப்படியா! என்ன செய்யுள்னு உங்களுக்கு நினைவிருக்கா மிஸ்டர் நந்தா?"

"ம் நல்லா ஞாபகத்தில் இருக்கே!" என்று தன் காதில் விழுந்த சொற்களை கோர்வையாகக் கூற முடியாமல் திக்கித் திணறி சொல்லி முடித்தான்!

சற்று யோசித்த ஷர்மா

"ம்ஹூம்! நீங்க இதுவரைக்கும் ஜோதிட ஆராய்ச்சி சம்மந்தமான புத்தகங்கள் ஏதாச்சும் படிச்சிருக்கீங்களா?"

"இல்லை! படிச்சதில்லை!"

"வெரி இண்ட்ரஸ்டிங்க்! நீங்க சொன்ன செய்யுள் புலிப்பாணியார் எழுதின பாடல்களிலே ஒண்ணு! ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் 3,7,5,11 வது இடங்களில் தனித்து இருந்தால் ஜாதகன் மாய மந்திரங்கள் அல்லது வைத்தியக் கலைகளில் தேர்ச்சி பெறுவான் என்று பொருள்! ஆனா இதை எதுக்கு உங்க காதுல வந்து சொல்லணும்!"

"வைத்தியக் கலைன்னு சொன்னது ஓரளவு பொருந்தி வருது! நாம பண்ணுறதே மூலிகைகள் தொடர்பான ஆராய்ச்சிதான்! ஆனா மந்திரங்கள் எல்லாம் எதுக்காக கத்துக்கனும் அதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை! ஆர்வமும் இல்லை"

"ஒண்ணும் ஆச்சரியப் பட வேண்டாம் மிஸ்டர் நந்தா! உங்க டேட் ஆஃப் பர்த், டைம், பிளேஸ் ஆஃப் பர்த் சொல்லுங்க! வெரிஃபை பண்ணிடலாம்"

ஷர்மா கேட்ட தகவல்களைச் சொன்னதும் தனது லேப்டாப்பில் இணைய இணைப்பை உயிர்ப்பித்து ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தேடி அதில் இந்த விவரங்களை உள்ளீடு செய்தார்

"யங் மேன்! எனக்கு புரிஞ்சிடுச்சு! கடக லக்கினம் மகர ராசி! ஏழாமிடத்தில் சந்திரன் தனித்து நிற்கிறான்! ஆனா நீ மாய மந்திரமெல்லாம் கத்துக்குவேன்னு எனக்கும் நம்பிக்கை இல்லை! அஃப்கோர்ஸ் உன்னைப் போலவே எனக்கும் இவ்விஷயங்களில் நம்பிக்கையோ ஆர்வமோ கிடையாது"

அப்போது அவரது காரியதரிசி ஆனந்தி அறைக்குள் நுழைந்தாள்!
"ஷர்மா! நாம் திருவண்ணாமலை செல்ல வேண்டும்! கார் தயாராக இருக்கிறது!
இப்போது புறப்பட்டால்தான் இரவுக்குள் சென்று சேர முடியும்" என்று நினைவூட்டினாள்!

"மிஸ்டர் நந்தா! நாம மீட் பண்ணப் போறவங்க டீடெய்ல்ஸ் எடுத்துக்கிடீங்க அல்லவா?"

"ஓ! தனியா எடுத்து வெச்சிருக்கேனே"

"ஓகே! தென் லெட்ஸ் மூவ்"

மூவரும் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினார்கள்!

ஹோட்டல் வளாகத்தை விட்டு அந்த கார் வெளியேறியதும் ஹோட்டல் காம்பவுண்ட்டிற்கு எதிரே நின்றிருந்த ராஜேஷ் தனது சட்டைப் பையிலிருந்த செல்ஃபோனை எடுத்தான்!

"மகேஷ்! கார் புறப்பட்டுடுச்சு!"

செல்ஃபோனை அணைத்துத் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு சாலையின் இருபுறமும் கவனித்து சாலையைக் கடந்து எதிர்ப்புறம் நோக்கி நடந்தான்!

சாலையின் எதிர்ப்புறத்தை அடையச் சில வினாடிகளில்
இடதுபுறமிருந்து அதி வேகமாக சரேலெனெ வந்த அம்பாசிடர் கார் இவன் மீது மோது 6 அடி தொலைவில் இவனை வீசி எறிந்தது! விழுந்த அதே நொடியில் அவனது உயிரும் பிரிந்திருந்தது!

சாலையில் அவனது ரத்தம் படரத் தொடங்கியது!

கார் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது! தான் ஓட்டாமல் காரின் முன்புறம் டிரைவர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நந்தா ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்!

ஆழ்ந்த தியானித்திலிருந்த சுவாமி நித்தியானந்தர் சட்டென உடல் சிலிர்த்தார்! பின்னர் மெல்லிய சிந்தனையுடன் கண்திறந்தார்!

"சுந்தரேசா! அங்கப்பன் மகள் செல்லாயியின் கந்தர்வ மணம் முடிவுக்கு வந்துவிட்டதென்று அவளிடம் தெரிவித்துவிடு! மேலும் அங்கப்பனை உடனடியாக என்னை வந்து சந்திக்கும்படிக் கூறி இங்கே அழைத்து வா! அவருக்குச் சில வேலைகள் இருக்கின்றன!"


தொடரும்...............!

10 comments:

  1. நடையில ஒரு தேர்ந்த எழுத்தளருக்கு இருக்கிற வாசம் அடிக்குதே...

    சுவாமி நித்தியானந்தர் - நல்ல பேரு தேர்வு... நித்திரை :-)...

    ReplyDelete
  2. Kathai superaa poayitu iruku thaLa... ithe formla poanga :)

    ReplyDelete
  3. thalai....please write every part everyday...suspense thaangala...

    ReplyDelete
  4. உடல் சிலிர்த்தார்!

    அண்ணா அருமையா போகுது

    உண்மையிலேயே சீக்கிரம் படிக்கனும் போல இருக்கு

    ReplyDelete
  5. சிபி... நல்லா இருக்கு... கதையின் பாத்திரங்களும் காட்சிகளும் நல்ல மிக்ஸ்ங் !! ம்ம்ஹும்.. நெக்ஸ் எப்ப??? சீக்கிரம் சீக்கிரம்.....

    ReplyDelete
  6. தல.. சூப்பரு..
    பொருமையா போங்க.. ஒன்னும் அவசரம் இல்லை..
    நல்லா ரோசிச்சி.. எழுதவும்..
    3 நாளைக்கு ஒரு பகுதி போதும்..

    வாழ்த்துக்கள்..
    :)

    ReplyDelete
  7. சார்...

    இன்னும் உங்க ஸ்பீட் வரலைன்னு நினைக்கறேன்...!! சீக்கிரம் பிக்கப் பண்ணுங்க...!!

    நாமளும் ஒரு கதை எழுதலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்...!!!

    http://kaalapayani.blogspot.com/2009/03/1.html

    ReplyDelete